அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும், அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளையும்  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கடந்த அதிமுக அரசு பதவியில் இருந்தபோது செய்த ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த செயல்களின் மூலம் நாடு எவ்வளவு கடினமான மற்றும் நஷ்டமான சூழலில் உள்ளது என்பதை குறித்து வெள்ளை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். மேலும் இது முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை என்றும் அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

ஒரு கிலோ மீட்டர் பஸ் ஓடினால் ரூ.59.15 போக்குவரத்து துறைக்கு இழப்பு.
டீசல் விலைக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்து துறையின் நஷ்டத்துக்கு காரணம்.
மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்துத் துறை உள்ளது.
மகளிருக்கு இலவச பஸ் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே போக்குவரத்து துறையில் நஷ்டம் உள்ளது.
கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் வாகன வரி குறைவு.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

Leave a Comment