உங்கள் பெயர் M ல் ஆரம்பிக்கிறதா!!அப்போ உங்க character இப்படித்தான் இருக்கும்!!

Photo of author

By Janani

உங்கள் பெயர் M ல் ஆரம்பிக்கிறதா!!அப்போ உங்க character இப்படித்தான் இருக்கும்!!

Janani

Does your name start with M!! Then your character will be like this!!

நமது பிறப்பு என்பது நமது கையில் கிடையாது, அது கடவுளின் கையில் தான் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு நடப்பது அனைத்தும் நமது கையில் தான் உள்ளது. பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர் வைப்பது என்பது உலக நியதி. அவ்வாறு வைக்கக்கூடிய பெயரினை அவரது வாழ்க்கை முன்னேற்றம், குண நலன்கள், குடும்ப முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அவர் பிற்காலத்தில் இவ்வாறு வாழ வேண்டும் என எண்ணி பெயரினை வைப்பர். இவ்வாறு வைத்த பெயரின் முதல் எழுத்து M என ஆரம்பிப்பவர்களின் குண நலன்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம்.
இந்த எழுத்தில் பெயரினைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசம் ஆனவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், பாதுகாப்பு உணர்வை தரக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்றவாறும் இவர்கள் இருப்பார்கள். நமது வாழ்க்கையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்த யோசனை அவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
தனது வாழ்க்கையில் புதியதாக ஒரு முயற்சியை தொடங்குவதற்கு சிறிதும் தயங்காதவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை நெறிமுறைகள் ஆகிய அனைத்திற்கும் அதிக அளவில் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கை என்பது மிக அதிகமாகவே இருக்கும். எனவே வாழ்க்கையில் நிறைய வெற்றிகளை காண்பார்கள்.
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் அனைத்து விதங்களிலும் யோசித்து திட்டமிட்டு செய்வார்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வகுத்து வைத்திருந்த எல்லையை ஒருவர் மீறினால் மிகவும் ஆக்ரோஷமானவர்களாகவும் மாறி விடுவார்கள். இவர்களின் பொறுமையை ஒருவர் சோதித்துப் பார்க்க நினைத்தால் அவர்களின் கதி அவ்வளவுதான்.
இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு விரைவாக முடிவெடுக்க மாட்டார்கள். நன்றாக அலசி ஆராய்ந்து முழு விவரத்தையும் தெரிந்த பின்னர் தான் ஒரு செயலில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்கள் காதலில் அவ்வளவு எளிதில் ஈடுபட மாட்டார்கள். மேலும் இவர்களிடம் கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும்.
இவர்கள் இயற்கையிலேயே மிகுந்த கலைஞர்களாகவும், வாழ்க்கையில் நிறைய விஷயத்தை அனுபவித்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு பிடித்த ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் எக்காரியத்தினையும் செய்ய தயங்காதவர்களாகவும் இருப்பார்கள்.