உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்குகிறதா..? அப்போ உங்களைப் பற்றிய ரகசிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Photo of author

By Janani

உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்குகிறதா..? அப்போ உங்களைப் பற்றிய ரகசிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Janani

ஒருவருடைய பெயர் தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அவரவர் பெயரில் உள்ள அர்த்தங்களின் வாயிலாக தான் அவர்களது வாழ்க்கை முறைகளும், முன்னேற்றமும் அமையும். இப்பொழுது N என்ற எழுத்தை பார்க்கும் பொழுதே, முதலில் ஒரு கோடு மேல் நோக்கியும், பின்பு கீழ் நோக்கியும், இறுதியாக மேல்நோக்கியும் செல்லும். இவர்களின் வாழ்க்கையை இந்த எழுத்தே காட்டிக் கொடுத்து விடும்.

அதாவது N என்ற எழுத்தில் ஆரம்பிக்கக் கூடிய பெயர்களை உடையவர்களின் வாழ்க்கை இறக்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். அதன் பிறகு வாழ்க்கை சற்று உயர்ந்து அங்கு ஒரு தடங்கல்களை எதிர்கொண்டு, மீண்டும் வாழ்க்கை கீழ்நோக்கி இறங்கிவிடும். அதன் பிறகு தான் ஒரு தெளிவு ஏற்பட்டு அவர்களது வாழ்க்கை உயரும்.

பொதுவாக இவர்கள் அனைத்து விதமான மக்களிடமும் மற்றும் அனைத்து விதமான இடங்களிலும் பழகக்கூடியவர்கள் ஆவார்கள். அதாவது பழைய கஞ்சும் சாப்பிடுபவர்கள் ஆகவும், பீட்சா பர்கர் என சாப்பிடுபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தி இருக்கக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் குடிசையில் இருந்து தான் கோபுரத்திற்கு செல்வார்கள். எனவே அனைத்து மக்களிடமும் சமமாக பழகும் தன்மையை கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லாவிதமான கஷ்டங்களையும், வசதி வாய்ப்புகளையும் அனுபவித்தவர்கள் என்றால் இவர்கள்தான். குடும்பத்தை அதிகம் நேசிப்பவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

அன்பு என்ற ஒன்றுதான் அனைத்து இடங்களிலும் இருப்பதாக இவர்கள் எண்ணுவார்கள். அன்பிற்கு அடிமையானவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் நிதானமாக யோசித்து முடிவு செய்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் சிறு வயதிலேயே பல அனுபவங்களை பெற்றவர்களாக இருப்பார்கள்.

எனவே இவர்கள் வேலைக்குச் செல்லும் பொழுது கூட அந்த வேலையின் நுணுக்கங்களை வேர் முதல் தெரிந்து கொண்டு மிக சுலபமாக மற்றும் விரைவாக செய்து முடிப்பார்கள். இவர்களிடம் நம்பிக்கை, நேர்மை மற்றும் நாணயம் என்பது அதிகமாகவே இருக்கும்.

இவர்கள் சரியான விஷயத்தை சரியான முறையில் பேசுபவர்கள் ஆவார்.எனவே இவர்களிடம் பேசி நமது வழிக்கு கொண்டு வருவது என்பது இயலாத ஒன்றாகும்.