இனி நாய்களும் ரயிலில் பயணம் செய்யலாம்!! மக்கள் மத்தியில் வரவேற்பு!!

Photo of author

By Jeevitha

பெரும்பாலும்  மக்கள்  வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். ஏனென்றால் இந்த மோசமான காலகட்டத்தில் யாரை நம்புவது என்று கூட தெரியவில்லை.

ஐந்தறிவு  ஜீவன் நாய்க்கு உள்ள நன்றி கூட  ஆறறிவு உள்ள மனித பிறவிக்கு இல்லை. நம் முன்னோர்கள் “நாய்களுக்கு ஒரு வேலை உணவு போடு” அது காலத்துக்கும் நன்றி உடன் இருக்கும் என்று சொல்வார்கள். இந்த அன்பான செல்லப்பிராணிகளை மக்கள் பல்வேறு காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது பிரிய மனமில்லாமல் கூடவே அழைத்து செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதற்கு இப்பொழுது இரண்டு (option)உள்ளது. இதில் முதல் வழி ரயிலில் முதலாம் வகுப்பு AC பதிவு செய்ய வேண்டும். அதிலும் கூபே (coupe) டிக்கெட் இருக்க வேண்டும். கூபே என்பது ரயில் முதல் வகுப்பில் இருக்கும் வகை. இதில் இரு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். சில நேரங்களில் (coupe) கிடைக்காது அப்பொழுது நாங்கள் ரயிலில்  செல்லப்பிராணியை அழைத்து செல்கிறோம் என கூறி  (coupe) பெற வேண்டும்.

இரண்டாவது வழி பிரேக் வேன் அல்லது ரயிலின் லக்கேஜ் வேனில் செல்ல பிராணிகளை அனுப்பலாம். ஆனால் இந்த முறையில் நாய் அழைத்து செல்லும் நபரும் இந்த ரயலில் பயணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். எனவே இந்த அட்டகாசமான  முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் செல்ல பிராணிகளை வெளியே  அழைத்து  செல்லுங்கள் . மேலும் இந்த இரண்டு முறைகளிலும் உங்கள் செல்ல பிராணிகளை பார்த்து கொள்ள வேண்டியது உங்கள்  பொறுப்புகள் தான்.