இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

Photo of author

By Hasini

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் வளர்ந்த ஒரே துறை ஆன்லைன் பரிவர்த்தனை ஆகும்.கடந்த ஒரு வருடத்திற்க்குள், யுபிஐ கட்டணம், கார்டு பேமெண்ட்ல், மொபைல் வங்கி மூலம் மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஏராளமானவற்றை நிறைவு செய்தனர்.

ஆனாலும் கூட, எளிமையாக வீட்டில் இருந்து கொண்டே இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும், இதில் பல ஆபத்துக்கள் மறைந்து  உள்ளன. உதாரணத்திற்கு நம்மை பற்றி சிறிதளவு விஷயம் மோசடி நபர்கள் தெரிந்து கொண்டாலும் வம்புதான். இந்த மோசடிகளை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்.

OTP : ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது நிறைய நிறுவனங்கள் தகவல்களை சரிபார்க்கவும், தரவுகளை பரிசோதிக்கவும் ஓ.டி.பி.யை உபயோகப்படுத்தி வருகின்றனர்.அதே போல் இதன் மூலம் மோசடிகளை தவிர்க்க இந்த நன்கெழுத்து கடவு சொல்லை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சோஸியல் மீடியா ஹேக்கிங்: தற்போதைய கால கட்டத்தில் சமூக ஊடக ஹேக்கிங் மிகவும் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்.எனவே தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இதன் மூலம் பணம் கேட்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து விட்டு பணம் அனுப்புங்கள்.இந்த சூழலில் மிக எச்சரிக்கை தேவை.

Tap and Pay மோசடி: இது மிகவும் சுலபமாக பயன்படுத்த கூடியது ஆகும்.கொரோனா கால கட்டத்தில் இந்த முறை அதிக பேரால் பின்பற்றப்பட்டது.இதில் கார்டை நாம் SOP இயந்திரத்திற்கு அருகே எடுத்து சென்றாலே, நம் கணக்கில் இருந்து 5000 ருபாய் வரை செலுத்தலாம்.இந்த படிவர்த்தனையிலும், கூடுதல் கவனம் தேவை.

சிம் ஸ்வாப்: உங்களின் தொலைபேசி தொலையும் பட்சத்தில், இதுபோன்ற மோசடிகள் அதிகரிக்கின்றன.இந்த சூழ்நிலைகளில், தொலைபேசி அழைப்புகளை கவனமாக கையாள வேண்டும்.சைபர் குற்றவாளிகள் உங்களின் வங்கி கணக்கை பற்றி விவரங்கள் கேட்கும் பட்சத்தில் நாம் அவர்களை திசை திருப்ப வேண்டும்.

கேச் தரவு: இன்றைய கால கட்டத்தில் கூகுள் நாம் உலகின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.பெரும்பாலும் மோசடிகள் இதன் மூலமாகவே நடைபெறுகிறது.எனவே, அனைவரும் கூகிள் உடன் சேர்ந்து கேச் தரவையும்(Cache Data) அழிக்க வேண்டும்.