தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இருவருக்கும் இடையே சொற்போர் வெடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக தற்போது செந்தில் பாலாஜி அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் பாஜக தலைவர் அரசியல் கோமாளி என்று பேசினார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். கூட்டத்திற்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது வடகிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 1.5 லட்சம் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று கூறினார்.
24 மணி நேரமும் பணியாற்றும் விதத்தில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அரசியல் கோமாளி உலகத்திலேயே மிகப்பெரிய கரகாட்ட கோஷ்டி பாரத ஜனதா கட்சி தான். உலகத்திலேயே ஈஸ்வரன் கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடிய ஒரே கோமாளி அவர் மட்டும்தான் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் எப்படிப்பட்ட கோமாளி குறித்த கேள்விகளை தயவு செய்து என்னிடம் கேட்க வேண்டாம் பத்திரிகையாளர்கள் மீது அக்கறை கொண்ட அரசு திமுக நேற்று கூட பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினார். ஆனால் அவரோ பத்திரிகையாளர்களிடம் கேட்டால் கேளுங்கள் என பேசுகின்றார் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.