2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

0
42
#image_title

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

இனி பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்தார்.அந்த புதிய நோட்டுகள் தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

2019-2020ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. மேலும் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 3.62 லட்சம் கோடியாக குறைந்து காணப்பட்டது. பெரும்பாலும் மக்கள் 500ரூபாய் நோட்டுகளையே அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை, செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறினர்.

மேலும் செப்டம்பர் மாத இறுதி நாட்கள் வர தொடங்கி விட்டதால், 28 ஆம் தேதி முதல் பயணிகளிடம் இனி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது எனவும், அப்படி வாங்கினால் அந்த நடத்துனரே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென்று போக்குவரத்து கழக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
Jeevitha