டி.டி.வி தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் போன்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களுக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உத்தரவிட்டிருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஏற்பட்ட தகராறு காரணமாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் என்று அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்கிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்று விட்டார். ஆனாலும் தினகரனை ஒதுக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

இதன்காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அதோடு அமைச்சர்களை தினகரன் உள்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். அதோடு தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தனர், சிறை தண்டனை முடிந்த பின்பு சசிகலா வரும் ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வருகின்றார். இதன் காரணமாக கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்த அதிமுகவினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் இப்போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்கள் அது குறித்து விசாரணை செய்தபோது,

தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் இடமிருந்து மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு போயிருக்கின்றது முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதோடு அந்த கட்சியை சார்ந்த அமைச்சர்கள் என்று யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக திமுகவை விமர்சனம் செய்யுங்கள் என்று அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருக்கின்றது.

தினகரன் உடைய இந்த உத்தரவால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று தெரிகின்றது. அதிமுக தரப்பை விமர்சனம் செய்யக்கூடாது என்று தெரிவித்தால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுகவுடன் இணைக்கப் போகிறார்களா?A அப்படியானால் நாம் இப்பொழுதே அதிமுகவில் இணைந்துவிட்டால் தான் நமக்கு நல்லது என பலவிதமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த கட்சியின் நிர்வாகிகள் என்று தெரிவிக்கிறார்கள் அ.ம.மு.க வட்டாரங்களில்.