ஒருவருக்கு தெய்வத்தின் பலம் என்பது நன்றாக இருந்தால் அனைத்து கிரகங்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை, நவகிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்கிறோம். அதாவது தெய்வமானது நவகிரகங்களின் கைகளில் மனிதர்களை ஒப்படைத்து விட்டது.
எனவே நவகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்து விட்டால், நவகிரகங்கள் நமக்கு சாதகமாகவே அமையும். சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று உள்ளதால் தான், இந்த கிரகங்களை குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி என்பது அனைவருக்கும் நல்ல விதமாகத்தான் இருக்கும்.
இதில் ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது மிகவும் சிறப்பாக இருக்கும். இவற்றுள் மேஷம் ராசியினருக்கு யூகங்களை வகுக்கக் கூடிய சக்திகளை கொடுப்பார். ரிஷபம் ராசியினர் கெட்டிக்காரத்தனமாக இருப்பீர்கள். மிதுனம் ராசியினர் உங்களுடைய பலத்தை நிரூபிப்பீர்கள்.
கடகம் ராசியினர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக இருப்பீர்கள். சிம்மம் ராசியினருக்கு சனிபகவான் பல பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டார். எனவே இனிவரும் காலங்களில் நீங்களாகவே அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். கன்னி ராசியினர் உங்களது வார்த்தைகளால் வசிய ஆற்றலை பெறுவீர்கள்.
துலாம் ராசியினர் கடன் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். விருச்சிகம் ராசியினர் இந்த உலகத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தனுசு ராசியினர் இடமாற்றம் அடைவீர்கள். மகரம் ராசியினர் முன்னேற்றம் அடைவீர்கள்.
கும்ப ராசியினர் குழப்பங்களை தீர்ப்பீர்கள். மீனம் ராசியினர் மன சஞ்சலங்கள் இல்லாமல் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது கட்டாயம். சிவபெருமானை வழிபடுவது என்பது அனைத்து ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும்.
மீனம், மேஷம், கும்பம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் திருத்தலங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது. இந்த ராசிக்காரர்கள் அனைவரும் சிவபெருமான், விநாயகர், அனுமான் ஆகிய தெய்வங்களை வழிபட்டால் மேலும் பல நன்மைகளை தேடி தரும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி இது போன்ற சனிகளை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. சனிப்பெயர்ச்சி என்பது அனைவரது வாழ்க்கையையும் உயர்த்த மட்டுமே நடைபெறும். அதாவது ஒரு சிலருக்கு பலவிதமான பாடங்களை கற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்ற உதவும்.
கண்டக சனி, அஷ்டம சனி என இந்த தோஷங்களை நீக்க பரிகார ஆலயங்களுக்கு செல்வதை மேலே கூறப்பட்ட ராசிகள் தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது போன்ற சமயங்களில் சனிபகவான் கோவிலுக்கு இவர்கள் செல்வது, எனக்கு அஷ்டம சனி இருக்கிறது, கண்டக சனி இருக்கிறது என்று நாமாகவே சென்று சனிபகவானிடம் கூறுவது போல இருக்கும்.
சனி பகவானின் பரிகார ஆலயங்களுக்கு சென்றாலும் அங்கு உள்ள மற்ற தெய்வங்களான தர்பாரீஸ்வரர், விநாயகர் இது போன்ற தெய்வங்களை எவ்வாறு வணங்குகிறோமோ, அதே போன்று சனி பகவானையும் வணங்கி விட்டு வந்து விட வேண்டும். தோஷங்களை நீக்குவதற்காக, பரிகாரங்களை செய்வதற்காக என சனி பகவான் கோவிலுக்கு மேல் கூறிய ராசிக்காரர்கள் செல்லக் கூடாது.