மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள்.
மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் மன நிம்மதி கிடைக்கிறது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். கடவுளால் மட்டுமே நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முடியும். அதற்கு முதலில் நாம் சரியான முறையில் கடவுளை வணங்க வேண்டும்.
நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்வோம், ஆனால் அங்கு நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளே நமக்கு மென்மேலும் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொடுத்து விடும். எனவே கோவிலுக்கு சென்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது? என்பதை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
அப்பொழுதுதான் நம்முடைய பிரச்சனைகளை கடவுள் ஏற்று நமக்கு அருள் புரிவார். மாறாக கடவுளின் கோபத்திற்கு காரணமாக நாம் இருந்து விடக்கூடாது. கோவிலுக்கு செல்லும் பொழுது எந்தெந்த விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும், இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் காண்போம்.
1. கோவிலுக்கு சென்றவுடன் முதலில் அங்கு இருக்கும் விநாயகரை தான் வழிபட வேண்டும். இல்லை என்றால் காரியத்தடை உண்டாகும். அதேபோன்று கோவிலில் இருக்கும் அனைத்து கடவுளையும் வணங்கிய பிறகு, இறுதியாக தான் அங்கு இருக்கும் நவகிரகங்களை வணங்க வேண்டும்.
2. கோவிலில் நேர்மறையான கதிர்வீச்சுகள் நம் மீது படும் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்போம். எனவே கோவிலுக்குள் நுழைந்த உடனேயே செல்போன்களை ஆஃப் செய்து விட வேண்டும். ஏனென்றால் செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு, தெய்வத்திடம் இருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகளை தடுத்துவிடும்.
3. கோவிலில் அர்ச்சகர் தரும் திருநீரை கோவில் தூண்கள் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் கொட்டி விட்டு சென்றால், உங்களுக்கு கிடைத்த வரத்தை நீங்கள் விட்டு சென்றதற்கு சமமாகும். எனவே கோவில் பிரசாதத்தை கண்டிப்பாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
4. அதேபோன்று மற்றவர்கள் கோவில் தூண்களில் கொட்டி வைத்திருக்கும் திருநீரை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் மற்றவர்களின் பாவங்களை நீங்கள் எடுத்துக் கொண்டதற்கு சமமாக கருதப்படும். மேலும் அவர்களது வாழ்க்கை துன்பங்கள் அனைத்தும் உங்களது வாழ்க்கையிலும் வந்துவிடும்.
5. கோவில் படிக்கட்டுகளில் சூடம் ஏற்றக்கூடாது. ஏனென்றால் கோவில் படிகட்டுகளில் நீங்கள் சூடம் ஏற்றினால், அது அணைந்த பின்னர் மற்றவர்கள் அதனை மிதித்து நடப்பர். நீங்கள் எதை வேண்டி அந்த சூடத்தை ஏற்றினீர்களோ அதை கடவுள் கொடுத்தாலும் இறுதியாக மிதிக்கப்படும்.
6. கோவிலுக்கு சென்றால் கடவுளைத் தவிர அங்கு வேறு யாரையும் வணங்க கூடாது. அர்ச்சகர் காலில் விழுந்து வணங்கினால் கடவுளை அவமதித்ததற்கு சமமாக கருதப்படும். அதேபோன்று கோவிலில் திருமணம் நடைபெற்றாலும் கூட, அங்கு கடவுளைத் தவிர வேறு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூடாது.
7. கோவிலில் கடவுளை வணங்கிய பின்னர் ஐந்து நிமிடமாவது கோவிலில் அமர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு அமர்வதன் மூலம் கோவில் பாதுகாவலர்கள் என்று கருதப்படும் ஏழு சிரஞ்சீவிகளை நாம் வணங்குவதாக அர்த்தம்.
இவர்கள் நாம் வீடு செல்லும் வரை நமக்கு பாதுகாப்பாக நம்முடன் வருவார்கள். எனவே கோவிலில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால், அவர்களை வரவேற்க வேண்டும் என்பது நம்முடைய மரபு.
8. கோவிலில் அர்ச்சகர் கொடுத்த மலர் கீழே விழுந்து விட்டால் மறுபடியும் அதனை எடுத்து சூடிக்கொள்ளக் கூடாது.