நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம்.
ஆனால் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை நாம் செய்து இந்த விளக்கினை ஏற்றினால், நாம் எதற்காக விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அதற்கான பலன் நமக்கு கிடைக்காது.
நமது வீட்டில் உள்ள இருளை இந்த விளக்கு எவ்வாறு நீக்குகிறதோ, அதேபோன்று தான் இந்த விளக்கினை நாம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுதும் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
காலை நேரங்களில் சிலரால் விளக்கினை ஏற்றி வழிபாடு செய்ய முடியாவிட்டால் மாலை நேரங்களில் விளக்கினை ஏற்றி வழிபாடு செய்வர். அதேபோன்று தொழில் செய்யும் இடங்களில் கண்டிப்பாக தினம் தோறும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வைப்பர்.
சிலர் வேண்டுதல்கள் வைத்தும் 7 நாள், 9 நாள் மற்றும் 48 நாள் என விளக்கினை ஏற்றி வருவர். அவ்வாறு ஏற்றும் பொழுது கடமைக்கே என ஏற்றாமல் மனதார நமது வேண்டுதல்களை நினைத்து விளக்கினை ஏற்றினால் மட்டுமே அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
காலை நேரங்களில் நாம் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம் என்றால் கண்டிப்பாக குளித்துவிட்டு தான் ஏற்றுவோம். அதேபோன்று மாலையில் விளக்கு ஏற்றும் பொழுது குளிக்க முடிந்தால் குளிக்கலாம் அல்லது கண்டிப்பாக கை கால்களை ஆவது கழுவி விட்டு தான் பூஜை அறையிலேயே நுழைய வேண்டும்.
நாம் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் கூட, மாலை விளக்கேற்றும் பொழுதும் கண்டிப்பாக கை கால்களை கழுவி விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். தெய்வத்திற்கான மரியாதையை நாம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
இதேபோன்றுதான் தொழில் செய்யும் இடத்திலும் கடையின் முதலாளிகள் கை கால்களை கழுவி விட்டு தான் விளக்கினை ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஏற்றக்கூடிய தீபத்திற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதேபோன்று இயற்கை உபாதைகள் ஏதேனும் இருந்தால் அதனை நீக்கிவிட்டு தான்ட்டு விளக்கினை ஏற்ற வேண்டும். இயற்கை உபாதைகள் ஏதேனும் இருக்கும் பொழுது முழு கவனத்துடன் விளக்கினை நம்மால் ஏற்ற முடியாது. எனவே நமது பிரச்சனைகளை முடித்துக் கொண்டு அதற்குப் பிறகுதான் முழு மனதுடன் விளக்கினை ஏற்ற வரவேண்டும்.
பெண்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது அந்த விளக்கினை கீழே எடுத்து வைத்து அமர்ந்துதான் விளக்கினை ஏற்ற வேண்டும். அதன் பிறகு தான் பூஜை அலமாரியின் மேல் வைக்க வேண்டும்.