வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

Photo of author

By Janani

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

Janani

பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் செய்வது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். நாம் வீட்டை தினமும் சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்கள் நம்மை தாக்காமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தில் வீடு என்பது லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால், சுத்தமாக இருந்தால் தான் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் பணவரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணத்தை இழக்க நேரிடும் மற்றும் துரதிஷ்டம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

செய்யக்கூடாத தவறுகள் என்ன?:

1. நமது வீட்டில் இருந்து யாரேனும் ஒருவர் வெளியில் சென்றால் அவர் சென்ற உடனேயே வீட்டை துடைக்க கூடாது. சிறிது நேரம் கழித்து தான் துடைக்க வேண்டும். ஏனென்றால் வெளியில் ஒருவர் சென்றவுடன் வீட்டினை துடைக்கும் பொழுது, அந்தக் குறித்த நபருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுடன் வேலை மற்றும் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.

2. வீட்டை சுத்தம் செய்த பின்னர் அந்த அழுக்கு தண்ணீரை வீட்டின் முன்பாக ஊற்றக்கூடாது. ஏனென்றால் அது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் லட்சுமி தேவியின் கோபம் உங்கள் மீது வந்துவிடும்.

3. வீட்டை துடைப்பதற்கு உடைந்த வாளியை பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று சிவப்பு நிற வாளியையும் பயன்படுத்தக் கூடாது.

கட்டாயம் செய்ய வேண்டியவை:

1. வீடு துடைக்கும் பொழுது அந்தத் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும். ஏனெனில் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்குவதுடன், தரையும் பளபளப்பாக இருக்கும்.

2. ஆனால் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பை சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம்.

3. வீட்டை துடைக்கும் பொழுது வடக்கு திசையில் இருந்து ஆரம்பித்து, வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டுமாம்.

4. மதிய நேரத்தில் வீட்டின் தரையை துடைக்க கூடாது. வீட்டினை துடைக்க வேண்டும் என்றால் காலை நேரத்திலேயே துடைத்து விட வேண்டும்.