தமிழக அரசின் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இவர்களுக்கு மட்டும் 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் இலவசம்!

0
124
Don't miss this opportunity from Tamil Nadu Government! 10 gram gold medal is free for them only!
Don't miss this opportunity from Tamil Nadu Government! 10 gram gold medal is free for them only!

நம் தமிழக அரசு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்காக பல சலுகைகள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சொந்தமாக முன்னேறும் வகையில் நிதி உதவி திட்டம், கடன் உதவி திட்டம், மானிய திட்டம் போன்ற திட்டங்கள் மக்களுக்காக வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் விபத்து நிவாரணம் இழப்பினை பொருத்து ரூ.1,00,000 வரை வழங்கப்படுகிறது.

கல்வி உதவி தொகையாக ரூ.1,000 முதல் 4,000 வரை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு செலவிற்கான ரூ.2,000  வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல்   மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்கள், அவர்களின் முன்னேற்றதிக்காக செயல்படுபவர்கள் போன்றோரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஒரு சிறப்பான விருதை வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

யாருக்கெல்லாம் விருது என அரசு ஒரு பட்டியல் கொடுத்துள்ளது. சிறந்த பணியாளர்,சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு, பார்வைத்திறன், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் 3 பேருக்கு,    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு, மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் ஒன்றுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநர்-நடத்துனர் 2 பேருக்கு, பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற கட்டமைப்புகள் வழங்கிய அரசு மற்றும் தனியார் 2 பேருக்கு வழங்கப்படும்.

அந்த விருதில்  10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த விருது 03.12.2024 அன்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி 28-10-2024 மாலை 5 மணி வரை மட்டும் மற்றும்   இந்த https://awards.tn.gov.in/ வலைத்தளத்தில் விண்ணபிக்கலாம்.

இதை பற்றிய தகவல்களுக்கு 04172-274177 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நிதி திட்டங்கள், சுயதொழில் திட்டங்கள் போன்றவை செயல்படுத்தி மக்களுக்கு நன்மை செய்து வருகிறது.

Previous articleதீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பஸ் கட்டணம் உயர்வின்றி பயணிக்கலாம்!! போக்குவரத்துக்கு துறை அமைச்சர் தகவல்!!
Next articleசாட் ஜி பி டியால் காதல் வசப்பட்ட சிறுவன்!! AI காதலிக்காக உயிரை விட்ட சோகம் !!