இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படமானது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகும். வாஸ்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் இந்த ஏழு குதிரை கொண்ட வாஸ்து படத்தை உங்கள் வீட்டில் மாட்டிப் பாருங்கள். அதன் பிறகு நடக்கவிருக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள். இந்த வாஸ்து படத்தினை வீடுகள் மற்றும் தொழில் புரியும் இடங்களில் வைக்கலாம்.
இந்த வாஸ்து படமானது சூரியன் மற்றும் சுக்கிரன் பகவானை குறிக்கிறது. இதில் சூரிய பகவான் வேகத்தையும், சக்தியையும் தரக்கூடிய கடவுள். சுக்கிர பகவான் என்பது கல்வி, திருமணம், தொழில் போன்ற சுகமான வாழ்க்கையை தரக்கூடிய கடவுள். எனவே இந்த ஏழு குதிரையை கொண்டு வாஸ்து படத்தினை நமது வீட்டில் வைக்கும் பொழுது ஐஸ்வரியம், செல்வம், ஆரோக்கியம், திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் ஏற்படும்.
இந்த வாஸ்து படத்தின் மூலம் சூரிய பகவானின் அருள் நமக்கு கிடைப்பதால் கண் திருஷ்டிகள், தீய சக்திகள் போன்றவை நம்மை விட்டு விலகும். அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் இந்த படத்தை வைப்பதன் மூலம் தொழிலானது மென்மேலும் உயரும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட தடைகளும் நீங்கும்.
இந்த வாஸ்து படத்தில் உள்ள ஏழு குதிரைகள் சூரிய பகவானாகவும், குதிரைகளுக்கு பின்புறம் உள்ள நிறம் ஆனது சூரியனின் ஒளி கற்றைகளால் உருவாகக்கூடிய வானவில்லில் உள்ள ஏதேனும் ஒரு நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அதேபோன்று அந்தப் படத்தில் உள்ள ஏழு குதிரைகளும் ஒரே திசையை பார்த்தவாறு ஓடுகிறதா என்பதை பார்த்தும் வாங்க வேண்டும்.
வாஸ்து படத்தில் உள்ள அந்த ஏழு குதிரைகளும் அமைதியாகவும், சாந்தமாகவும் ஓடக்கூடிய குதிரைகளாக இருக்க வேண்டும். ஆக்ரோஷமாக ஓடக்கூடிய குதிரைகளாக இருக்கக் கூடாது. இந்த வாஸ்து படத்தினை நமது வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ எந்த திசையை பார்த்தவாறு வைக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். இதற்கென தனியாக பூஜை செய்ய வேண்டும் என்பது இல்லை. சரியான திசையில் மாட்டினால் மட்டுமே போதும் இந்த வாஸ்து படத்திற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும்.
இந்த வாஸ்து படத்தினை நமது வீட்டின் நான்கு திசைகளிலுமே மாட்டிக்கொள்ளலாம். இருப்பினும் கிழக்கு திசை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதே போன்று இந்த வாஸ்து படத்தினை நுழைவு வாசலுக்கு எதிராக வைக்கக் கூடாது. அதாவது இந்த வாஸ்து படத்திற்கு முன்புறம் ஒரு சுவர் இருக்க வேண்டும். இந்த வாஸ்து படத்திற்கு முன்புறம் நுழைவு வாயில் இருந்தால் அந்த ஏழு குதிரைகளும் ஓடுவதற்கான வழியை நாம் ஏற்படுத்திக் கொடுத்தவாறு இருக்கும். எனவே இந்த வாஸ்து படத்திற்கு முன் புறம் ஒரு சுவர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வாஸ்து படத்தின் சக்தி நமது வீட்டிற்கு உள்ளேயே இருக்கும்.
எனவே வீட்டில் வைக்கும் பொழுதும் சரி, தொழில் செய்யும் இடத்தில் வைக்கும் பொழுதும் சரி அந்த வாஸ்துப்படத்திற்கு முன் புறம் ஒரு தடுப்பு சுவர் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு வழியினை நாம் ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் தொழில் முன்னேற்றம், குடும்ப முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் அந்த ஏழு குதிரைகள் எடுத்துக்கொண்டு வெளியே ஓடுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.