கட்டடம் கட்ட அனுமதி வாங்க எங்கும் அலைய வேண்டாம்! புதிய வசதியை அறிமுகம் செய்த முதல்வர் முக.ஸ்டாலின்!
புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வாங்க எங்கும் அசையாமல் ஆன்லைன் மூலமாகவே பெறும் வசதியை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஜூலை22) தொடங்கி வைத்துள்ளார்.
நாம் புதிதாக கட்டடங்கள் கட்ட வேண்டும் என்றால் அதற்குண்டான வரைபடம் வரைந்து அதை பஞ்சாயத்து அல்லது நகராட்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதற்குண்டான சரியான கட்டணத்தை கட்டி தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்பிக்க வேண்டும். பின்னர் அவர்கள் அனுமதி தந்துவிட்டால் நீங்கள் கட்டடம் கட்டும் பணியை தொடங்கலாம்.
இதற்கு நிறைய அலைய வேண்டியுள்ளது. இந்நிலையில் மக்களின் அலைச்சலை குறைக்கும் விதமாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கட்டிடம் கட்டுவதற்கு ஆன்லைன் மூலமாக அனுமதி பெறும் வகையில் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதன்படி https://www.onlineppa.tn.gov. in/ இந்த இணையதளத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கட்டணத்தை கட்டி சமர்பித்தால் அதிகாரிகள் உங்கள் மனுவை ஆய்வு செய்து முடித்து பின்னர் அனுமதி கொடுப்பார்கள். இதனால் கட்டிடம் கட்டும் அனைவரும் இனி எந்த அலுவலகத்திற்கும் சென்று வீணாக அலைய வேண்டாம்.
மேலும் 2500 சதுர அடிவரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறத் தேவையில்லை. அதுமட்டுமில்லாமல் பணி முடிவு சான்றிதழ் பெறவும் தேவையில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது