TVK ADMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக மாநில கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் தமிழக அரசியலையே மாற்றும் அளவுக்கு வலுப்பெற்று வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாண நிலையில், அனைத்து ஊடகங்களிலும் தவெக தான் தலைப்பு செய்தியாக உள்ளது.
இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. தனது முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறும் அளவு தவெகவுக்கு ஆதரவு உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் அதற்கு விஜய் கூட்டணி அவசியம்.
இல்லையென்றால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். இதையறிந்த இபிஎஸ் விஜய் கூட்டணியில் சேர்க்க முயற்சித்தும் அது நடக்கவில்லை. விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காதது தான் அவர் அதிமுக கூட்டணியில் சேராததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் சேரப்போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் பொய் என்று தவெகவை சேர்ந்த பலர் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் விஜய் கட்சி ஆரம்பித்த போதே திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற கொள்கையுடன் தான் இருந்தார்.
இதனால், திராவிட வாடை உள்ள எவரையும் கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் விஜய் தெளிவாக உள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்படி இருக்க திராவிட வாடை உள்ளவர்களை கட்சியில் சேர்த்தால், அது தவெகவின் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று விஜய் நினைப்பதாகவும் சில கூறுகின்றனர். அதனால் செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன் என யாரையும் தவெகவில் சேர்க்க கூடாது என்பதில் விஜய் தெளிவாக உள்ளதாக தவெகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

