Breaking News, Politics, State

விஜய்யும் வேண்டாம்.. ஆட்சியில் பங்கும் வேண்டாம்!! ஓப்பனாக பேசிய காங்கிரசின் டாப் தலை!!

Photo of author

By Madhu

TVK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. 2026 தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் என்றே கூறலாம். திமுகவிற்கு எதிரான வலுவான கட்சியாக தமிழகத்தில் உருமாற வேண்டுமென பாஜகவும், பீகார் தேர்தல் தோல்வியை போல தமிழகத்திலும் தோல்வியடைய கூடாது என காங்கிரஸும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

பீகார் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்க கூடாது என்பதில் திடமாக இருக்கும் காங்கிரஸ், திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு பெறுவதற்கு விஜய்யை பயன்படுத்தி வந்தது. ஆனால் திமுகவோ இது குறித்து எந்த கருத்தைம் கூறாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ், விஜய்யுடன் கூட்டணியில் சேர்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க காங்கிரசின் முக்கிய தலையான பிரவீன் சக்ரவர்த்தியை விஜய்யிடம் பேச அனுப்பியது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று அவர் கூறியிருந்தார்.

இவ்வாறு காங்கிரஸ்-தவெக கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ராகுல் காந்தியை பிரதராக்குவது தான் எங்களது ஒரே நோக்கம். அதற்கு திமுக கூட்டணி தான் சரியாக இருக்கும்.

என்னை பொறுத்தவரை, இருப்பதை விட்டுவிட்டு பார்ப்பதற்கு ஆசைப்படுவது தவறு என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த வதந்திக்கு இவர் முற்றுப்புள்ளி வைத்ததுடன், திமுகவை தவிர்த்து விஜய்யுடன் கூட்டணி வைப்பது தவறான முடிவு என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

அண்ணாமலைக்கு 50 இபிஎஸ்க்கு 50.. அமித்ஷா போட்ட மெகா பிளான்!! ஷாக்கான அதிமுக!!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!