Agni Natchathiram 2024: மறந்து கூட இதை செய்யாதீங்க..!

0
387
Agni Natchathiram 2024
Agni Natchathiram 2024

Agni Natchathiram 2024: இந்த வருடத்தில் கோடை கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் 29 தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடவும் அதிக அளவு வெப்பம் புவியில் உள்ள உயிரினங்களை வாட்டி வதக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram Endral Enna) இந்திய துணைக்கண்டத்தில் ஆண்டு தோறும் நிகழக்கூடிய ஒரு  நிகழ்வாகும். இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இருந்து மே மாதம் வரை தொடர்ந்து நிகழும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும்.

நமது முன்னோர்கள் சில நிகழ்வுகளை இந்த காலக்கட்டத்தில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆன்மீக ரீதியாக அவர்கள் கூறினாலும் நமது ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியலை சார்ந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அக்னி நட்சத்திர நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டாம் என்பதை பற்றி இந்த பதிவில் (Agni Natchathiram 2024 in Tamil) காண்போம்.

செய்யக்கூடியவை

பொதுவாக இந்த அக்னி நட்சத்திர நாட்களில் சுப காரியங்களை நடத்தக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த நாட்களில் சுப காரியங்களை செய்யலாம். அந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் மின்சாரம் வசதி இல்லாத காரணத்தால் ஒரு சில காரியங்களை செய்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் அவ்வாறு கூறி வந்தனர்.

எனவே இந்த அக்னி நட்சத்திர நாட்களில் நீங்கள் ஏதாவது சுப காரியங்கள் செய்ய நினைத்தால் கட்டாயம் செய்யலாம். ஆனால் இந்த சமயத்தில் ஜோதிட ரீதியாக பார்த்தால் அக்னி பகவானான சூரிய பகவானால் தரக்கூடிய வேலை வாய்ப்பு, குழந்தை வரம், ஆரோக்கியம், ஆகியவற்றை இந்த காலக்கட்டத்தில் Agni Natchathiram In Tamilnadu 2024) பெறுவது சற்று கடினமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

செய்யக்கூடாதவை

  • பந்தக்கால் நடுவது
  • வீட்டு கிரகப்பிரவேசம்
  • விவசாயத்தில் பயிர்கள் செய்ய நடவு செய்வது
  • ஆறு, குளம், ஏரி அமைக்க கூடாது
  • நீண்ட தூரம் பயணத்தை தவிர்க்க வேண்டும்
  • வீடு, மனை வாங்க கூடாது

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram 2024 Date and timing) மே 4 தேதி தொடங்கி மே 29 தேதி வரை நீடிக்கிறது.

Previous articleAkshaya Tritiya 2024: தங்கம் தான் வாங்கணும்னு அவசியம் இல்லை..! செல்வம் பெருக இதை செய்தால் போதும்..!
Next articleஇந்த 7 மூலிகைகள் கொண்ட பானம் அருந்தினால்.. ஒரே மாதத்தில் இடுப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மொத்த கொழுப்பும் கரைந்து வெளியேறும்!!