வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

Photo of author

By Hasini

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி காட்டியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். எனவே அதன் காரணமாக அவர்கள் நேற்று பள்ளிக்கு வந்து விசாரணையும் நடத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரி ராஜேந்திரனிடம் கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

பிளஸ் 1 படிக்கும் மாணவிடம், ஆன் லைனில் வாட்ஸ்அப் மூலம் பாடம் நடத்தும் போதும், செல்போன் மூலமும் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்குச் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகி உள்ளதாகவும், புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வித்துறை சார்பில் விசாரணை முடிந்தது என்று கூறினார். இதற்கிடையில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஆசிரியர் சண்முகநாதன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.