விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

0
161
Vanniyarasu
Vanniyarasu

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது.

வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் அதை விட திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய தொகுதி என்ற பெருமையும் இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு உண்டு.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த காலங்களில் திமுக தலைமை இந்த தொகுதியில் குறிப்பிட்ட இந்த வன்னியர் சமுதாய நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு பொன்முடி சார்ந்துள்ள உடையார் சமுதாய நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது என்பதையும் அனைவரும் அறிவர். இந்த இடைத்தேர்தலில் திமுக வின் இந்த வன்னியர் புறக்கணிப்பு ஆளும் அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்த நிலையில் அதை முறியடிக்க இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தருவதாக திமுக தரப்பு வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் வன்னியர் மக்களை கவர திமுக தரப்பு அறிவித்த வாக்குறுதியை அவர்களுக்கு சோதனையாக அமைந்துள்ளது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கருத்து உறுதி படுத்துகிறது. வன்னிய மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த இந்த வாக்குறுதியை வன்னியர் சங்க மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்த்தாலும் கூட பரவாயில்லை.ஆனால் தங்களுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் எதிர்த்து விமர்சனம் செய்துள்ளது அவர்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விசிக நிர்வாகி வன்னியரசு வன்னியர்களுக்கு திமுக வழங்கிய உள் இட ஒதுக்கீடு வாக்குறுதியை மற்ற சமுதாய மக்கள் ஏற்று கொள்ள வில்லை என்று பதிவிட்டுள்ளார்.இவருடைய மனநிலை இப்படி இருக்கும் நிலையில் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் அவர்களின் வாக்குகளை முழுமையாக பெற்று கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு மனதோடு செயல்பட்டதாக இல்லை ஏதாவது உள்ளடி வேலையில் ஈடுபட்டதாக என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Previous articleஇரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம்
Next articleகாடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுக! மரணஅடியை கொடுத்த வன்னியர்கள்