குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Photo of author

By Ammasi Manickam

மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இது குறித்த முழுமையான செய்தியை படிக்க: மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

இந்நிலையில் மாணவர் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.

1. குஜராத் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ்ப்பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!

2. குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!