வன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!

Photo of author

By Sakthi

கருணாநிதி மீதான கோபத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்ததாக அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாளையதினம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கின்றது இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சொன்னால் ஜனவரிக்கு பின்பும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அறப் போராட்டத்தை நடத்த இருப்பதாக அந்த கட்சி தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்டம் சம்மந்தமாக விளக்குவதற்காக பாமகவை சார்ந்த இளைஞர்கள் அன்புமணியின் தம்பிகள் மற்றும் தங்கள் படையுடன் அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம் இணையவெளியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இருபத்தி ஒரு பேரை சுட்டு கொலை செய்தார்கள் நானும் பலமுறை சிறைக்குச் சென்றேன் நல்ல பழத்தை கேட்டேன் ஆனால் நமக்கு அழுகிய பழத்தை கொடுத்து விட்டார் கலைஞர் இந்த இருபது சதவீத இட ஒதுக்கீடு வந்திருந்தால் வன்னியர்களில் பல அரசு அதிகாரிகள் உருவாகி இருப்பார்கள் ஆனால் திட்டம் போட்டு நம்மை ஏமாற்றி விட்டார் கலைஞர் என்று தெரிவித்தார்.

வன்னியர் சமுதாயம் படை நடத்தி பார் ஆண்ட சமுதாயம் என்று தெரிவித்த அவர் ஆண்ட சமூகமான நமக்கு இலவசங்களை வழங்குகின்றேன் என்ற பெயரில் ஆட்டுக்குட்டி போன்றவற்றை வழங்கி பிழைத்துக்கொள்ள கூறுகின்றார்கள் என்று அதிமுக அரசையும் அவர் விமர்சனம் செய்திருக்கின்றார்.

பத்து வருடங்கள் போராடிய நிலையில் கலைஞர் நம்மை ஏமாற்றி விட்டார் என்று கோபத்தில் தான் கட்சி தொடங்கினேன் என்று தெரிவித்த ராமதாஸ் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கின்ற 202 சாதிகளை 6 பிரிவுகளாக பிரித்து கலைஞரிடம் பட்டியல் போட்டுக் கொடுத்து தனி இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்று தெரிவித்தேன் வன்னியர்கள் உடன் நரிக்குறவர்கள் வண்ணார் உட்பட பல சாதிகளை சேர்த்தேன் அதில்கூட பத்தாயிரம் பேர் கொண்ட தன்னுடைய சமுதாயத்தை சேர்க்க வில்லையே என்று அப்போது கலைஞர் என்னிடம் கேட்டார்.

வெறும் பத்தாயிரம் பேரை மட்டுமே கொண்டவர் ஐந்து முறை முதல்வர் ஆகி இருக்கின்றார் இப்போது அவருடைய மகன் முதல்வராக துடித்துக் கொண்டிருக்கின்றார் அவருடைய பேர பிள்ளையும் வந்துவிட்டார். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட ஜாதியாக இருக்கும் நாம் அவர்களிடம் இட ஒதிக்கீடு வேண்டும் என்று கேட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார்.