அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்!

Photo of author

By Sakthi

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்!

Sakthi

Dramatically low gas cylinder price! Happy merchants!
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்!
வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படும் கேஸ் சிலிண்டரின் இந்த மாதத்திற்கான விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றம் தான் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டரின் விலையை தீர்மானிக்கின்றது. இதையடுத்து மத்திய அரசும் கச்சா எண்ணெயின் விலையை வைத்து எண்ணெய் நிறுவனங்களே சமையல் எரிவாயுக்களின் விலையை தீர்மானிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை கேஸ் சிலிண்டரின் விலையை தீர்மானிக்கின்றது. அந்த வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த மே மாதம் வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 19 ரூபாய் குறைந்து 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து ஜூன் 1ம் தேதியான இன்று வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை மேலும் 70.50 ரூபாய் குறைந்துள்ளது.
இதையடுத்து நேற்று(மே31) வரை 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் இன்று(ஜூன்1) முதல் 1840.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.