ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

Photo of author

By Ammasi Manickam

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்காமல் இளைஞர்கள் மட்டுமே நடத்திய இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களும் ஒருவர். இந்நிலையில் அவர் தற்போது தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் அடுத்த பிரச்சனையை கையிலெடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள சில மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளும் இந்த ஊரடங்கால் மூடப்பட்டன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட சிலர் மதுபானங்களை பல மடங்கு லாபத்தில் கள்ளச் சந்தையில் விற்க ஆரம்பித்தனர். இந்நிலையில் மதுக்கு அடிமையானவர்கள் எந்த விலை கொடுத்தேனும் குடித்தே ஆக வேண்டும் என அதையும் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கட்டுக்கடங்காமல் இந்த மதுவின் விலை உயர்ந்து செல்வதால் மது பழக்கத்தை கொண்டவர்கள் எப்போ டாஸ்மாக் கடையை திறப்பார்கள் என்று ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்காக குறைந்தது தினமும் 2 மணி நேரமாவது கடையை திறக்க வேண்டும் என்று அவர்களால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

தற்போது அவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் மற்றொரு கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது இந்த ஊரடங்கு நேரத்தை சரியாக பயன்படுத்தி முழுமையான மது விலக்கை கொண்டு வர வேண்டும் என பாமக தரப்பும், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இதைப்பற்றி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலுவாக்கும் வகையில் சமீபத்தில் தமிழ்த்திரையில் வெளியாகிய திரௌபதி படத்தின் இயக்குனர் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வித்தியாசமான ஒரு முயற்சியை கையிலெடுத்துள்ளார். அதாவது இந்த மதுவால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களை வைத்தே சமூக ஊடகங்களில் போராட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள்.. உங்கள் கோரிக்கை அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும்.. என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

#NoMoreTASMAC என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அவர் பதிவிட்ட மற்ற சில பதிவுகள்

https://twitter.com/mohandreamer/status/1254293119723433984

இயக்குனர் மோகன் ஜி ஏற்கனவே சிலஆண்டுகளுக்கு முன்பு உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்ற செயல்களுக்கு காரணமாக உள்ள மதுவிற்கு எதிராக தனது போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களை தொடர்ந்து கவனித்துவரும் முதல்வர் அலுவலகம் இவரது இந்த போராட்டம் குறித்து கவனத்தில் கொள்ளும் என்றும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.