திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0
278

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரௌபதி படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது முதல் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. படத்திற்கான வரவேற்பு கூடியது போலவே அதற்கான எதிர்ப்பும் சில அமைப்புகள் மூலம் எழுந்தது.

இந்த நிலையில் தான் திரௌபதி படத்திற்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்கையும் தாங்கள் எடுத்து நடத்தி படத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்குவதாக பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு அறிவித்திருந்தார். இதனையடுத்து மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்ற திரௌபதி படம் எப்போது வெளியாகும் என படக்குழுவினரிடம் ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருந்தனர்.

https://twitter.com/mohandreamer/status/1229748357884596226

இதனையடுத்து நேற்று டிவிட்டரில் பதிவிட்ட படத்தின் இயக்குனர் மோகன் ஜி இன்று வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறியது போலவே இன்று மாலை 6.30 மணிக்கு பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதாவது வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரௌபதி படம் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

படம் வெளியீட்டு தேதியை பார்த்த ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் #Draupathi மற்றும் #திரௌபதி ஹேஷ் டெக்குகளை பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Previous articleதிமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!
Next articleவன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை! விளாசியெடுத்த கிருஷ்ணசாமியின் மகன்