அடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர்
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக சாதியை ஒழிப்பு மற்றும் அதன் கொடுமைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. சாதியை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அது போன்ற படங்களில் உதாரணமாக காட்டப்படும் காட்சிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த நபர் வேறு ஒரு சமுதாயத்தை சார்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிவிக்கும் பெண்ணின் பெற்றோர்கள் கொடுமைகள் செய்யும் கொடூரமானவர்கள் போலவும் அமைக்கப்பட்டிருக்கும்.
கல்வி,வேலைவாய்ப்பு மூலம் பொருளாதாரம் உயர்ந்தால் சாதி பிரிவினைகள் தானாக மறைந்து விடும் என்ற எதார்த்தத்தை மறைத்து காதல் செய்வதால் மட்டுமே அது மறையும் என்று இது போன்ற படங்கள் மூலமாக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.ஒரே சமுதாயமாக இருந்தாலும் காதல் என்றாலே பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில் அதற்கு சாதியை இணைத்து போலிப் பிரச்சாரம் செய்வது போல தான் அது போன்ற படங்கள் அமைந்துள்ளன.
மேலும் அரசியலில் தன்னுடைய இருப்பை காட்டி கொள்ள “தங்களிடம் சரக்கு மிடுக்கு” உள்ளதாக கூறி மாற்று சமுதாய பெண்களின் பின்னால் சுற்று வேண்டும் என குறிப்பிட்ட இளைஞர்களை தவறான வழியில் இழுத்து செல்லும் கீழ்த்தரமான செயல்களையும் சிலர் செய்து வருகின்றனர்.இது போல இயல்பாக வரக் கூடிய காதலை தங்களுடைய சாதி வெறியை காட்டவும், அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளவும் நாடக காதலாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் தான் இது போன்ற நாடக காதல் செய்யும் மற்றும் செய்ய தூண்டும் போலி சாதி ஒழிப்பு போராளிகளுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் தமிழ்த் திரைப்படம் ஒன்று தயாராகி வந்தது. திரௌபதி என்ற பெயரில் இதனை பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார்.இதில் நடிகர் அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்களின் தம்பி ரிச்சர்ட் ரிசி,தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார்,கருணாஸ் மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக, Crowd Funding என்ற முறையில் முழுக்க மக்களிடம் பெறப்பட்ட நிதியை வைத்து எடுக்கப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த திரௌபதி திரைப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில வட மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை குறித்தும் அதன் பின்னணி என்னவென்றும் உண்மை சம்பவத்தை கதைகளமாக கொண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் “சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என பாரதியார் பாடலையையே மாற்றி அதிரடி வாக்கியமாக அமைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் படக்குழுவினர். இதனையடுத்து இன்று வெளியான அந்த படத்தின் டிரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் அதிரடி வசனங்களுடன் கூடிய காட்சிகளை அமைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
இன்று வெளியான இந்த திரௌபதி படத்தின் முன்னோட்டம் YouTube இல் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #Draupathi மற்றும் #திரௌபதி என்ற அந்த படத்தின் இரண்டு ஹேஷ் டேக்குகளும் தேசிய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
“சாதியே இல்லை” சாதியை ஒழிக்க போகிறேன் என்று சொல்பவர்கள் மட்டுமே நடுநிலைவாதிகள் என்றும் மற்றவர்களை சாதி வெறியர்கள் போலவும் காட்டி வந்த தமிழ் சினிமாவிற்கு இந்த படம் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
காதல் என்ற போர்வையில் படிக்கும் இளவயது பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் நாடக காதல் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் நவீன நாடக காதல் காவியமாக இந்த திரௌபதி அமையும் என்று ட்விட்டரில் இந்த படத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அதே வகையில் இது சாதி வெறிப் படம் இதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.இவ்வளவு எதிர்பார்ப்பை தூண்டும் இந்த படம் எந்த சர்ச்சையும் இல்லாமல் வெளியாகுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.