ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் தர்பார் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.இதனையடுத்து படத்தின் ப்ரொமோசன் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். குறிப்பாக YouTube மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் படத்தின் ட்ரைலர் மற்றும் படங்களை பதிவிட்டு விளம்பரபடுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தர்பார் படம் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வந்தது.

இந்நிலையில் தான் பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குனரான மோகன். ஜி என்பவர் இயக்கியுள்ள அடுத்த படமான ‘திரௌபதி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. முழுக்க மக்களிடம் நிதி திரட்டி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் அஜித் மனைவியான ஷாலினியின் தம்பி ரிஷி ரிச்சார்டு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் வைரஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தில் ரிச்சார்டு ரிஷியுடன் தேசிய விருது வாங்கிய டூ லெட்படத்தின் கதாநாயகியான ஷீலா, மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் விழுப்புரம் போன்ற வடமாவட்டங்களில் பெண்களுக்கு எதிரானக நடக்கும் குற்றங்கள் குறித்த உண்மை கதையையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல்முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வடமாவட்டங்களில் காதல் என்ற பெயரில் திட்டமிட்டே சில குறிப்பிட்ட சமுதாய பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை பற்றிய உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் வெளியானது முதல் பல்வேறு பக்கமும் ஆதரவு பெருகியது.

இதில் “சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”,”அடிச்சா திருப்பி அடி”, “நீ ஓடி வரும் போதே அங்க உங்க அப்பன் உசுர வுட்டுருப்பான்”,”அடங்குனா அடங்கக் கூடாதுன்னு எங்க அண்ணன் சொல்லிருக்காப்ள”, பெரிய வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணா தான் லைப் கெத்தா இருக்கும்னு சொல்லிருக்காப்ள”, ” அவன் ஊரு மண்ணுல நம்ம கால வைக்கனும்னா அவங்க வூட்டு பொண்ணு மேல நம்ம கைய வச்சே ஆகனும்”,”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” என அனல் பறக்கும் அதிரடி வசனங்களுடன் இயல்பான தோற்றத்தில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் ட்விட்டர் மற்றும் யூடியூபில் நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படப் ப்ரோமோவுக்கு இணையாக ட்ரெண்டிங் ஆகி வந்தது. இது தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர்

இந்நிலையில் யூடியூபில் நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்திற்கு இணையாக 4 ஆம் இடத்தில் ட்ரெண்டிங் ஆகி வந்த திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது அதையும் தட்டி தூக்கிவிட்டு 1.6 மில்லியன் பார்வைகளை பெற்று 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் தயாரான ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தையே தாண்டி ஒரு சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைபடத்தின் ட்ரைலர் மக்களிடையே பிரபலமாகி வருவதை கண்டு அப்படத்தை தயாரித்த நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Comment