பாஜகவிலிருந்து அதிரடியாக வெளியேறும் திராவிட கட்சி.. ஓபிஎஸ் முடிவால் பரபரப்பு!!

0
150
Dravidan party to leave BJP.. Excitement due to OPS result!!
Dravidan party to leave BJP.. Excitement due to OPS result!!

ADMK BJP: பாஜகவிற்கும், அதிமுகவிற்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் 2026யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இரண்டு நிபந்தனைகளை முன் வைத்த பின்பே இபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தார். அதில் முதலாவது அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும். இரண்டாவது, இபிஎஸ்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக கூட்டணியிலிருந்து விலகி வேண்டும்.

இதில் முதலாவது நிபந்தனை அப்போதே நிறைவேறியது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறாமலிருந்த நிலையில், தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்த இருவரும் அண்மையில் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பாஜகவை சேர்ந்த பலரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனுமில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டுமென ஓபிஎஸ்யும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத தினகரனும் இனி பாஜகவில் இணைய மாட்டார்கள் என்று நினைத்த சமயத்தில், பாஜகவில்  மீண்டும் இணைய போவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், NDA கூட்டணியில் சேர்வதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். இவர்கள் மீண்டும் NDA கூட்டணியில் இணைந்தால், அதனை இபிஎஸ் ஏற்பாரா என்பது சந்தேகம் தான். இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் என மூவருக்கும் கடுமையான போட்டி நிலவி வரும் வேலையில், இவர்களின் இணைவு கூட்டணியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் இருவரும் NDAவில் இணைந்தால் அதிமுக பாஜகவிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். 

Previous articleசிபிஐயிடம் சிக்கிய தவெகவின் முக்கிய புள்ளிகள்.. அதிரும் அரசியல் அரங்கு!!
Next articleவிஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் அமமுக.. என்னாவா இருக்கும்!! சொல்லி அடிக்கும் தினகரன்!!