கேரட் ஜூஸ் தினமும் குடிப்பதால் இவ்வளவு மாற்றம்!! இனி உடலில் பல பிரச்சனைகளின் பயமில்லை!!

0
215

கேரட் ஜூஸ் தினமும் குடிப்பதால் இவ்வளவு மாற்றம்!! இனி உடலில் பல பிரச்சனைகளின் பயமில்லை!!

கேரட் என்பது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமாக கூம்பு வடிவ வடிவத்தில் இருக்கும். இது நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய உணவுப் பொருளாக உள்ளது. இது முதலில் ஆப்கானிஸ்தான் பகுதியில் பயிரிடப்பட்ட உணவாகும்.  இது பீட்டாக் காரோட்டீன் எனப்படும் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ சத்து  நிறைந்து காணப்படுகிறது. இதன் சாறு உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும், புற்றுநோய் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது என்று மருத்துவர்கள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும் என்கிறார்கள். மேலும் கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது காணப்படுகிறது. இதனால் கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் கேரட் ஜூஸ் பயன்படுகிறது. கேரட் பசியைக் கட்டுப்படுத்துதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைக்க உதவும்.நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கேரட் ஜூஸ் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த கேரட் ஜூஸ் உதவும்.

1 கப் கேரட் சாறு (236 மில்லி)

கலோரிகள்: 95

கொழுப்பு: 0.35

கார்போஹைட்ரேட்டுகள்: 21.90

நார்ச்சத்து: 1.9

புரதம்: 2.24

கொலஸ்டிரால்: 0.010

கேரட் சாறு பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொழுப்பைக் கரைக்கும்.

பார்வைத் திறனை அதிகரிக்கும்.

வயிற்று புண்கள் குணமாகும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்.

எலும்பு, பற்களுக்கு நல்லது.

செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

சருமப் பொலிவு மேம்படும்.

கல்லீரலை பலப்படுத்தும்.

இது போன்ற பல நன்மைகள் உள்ளதால் கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவது உடல் நலத்திற்கு நன்மையை தருகிறது.

Previous articleஇன்றைய தின புதிய வேலைவாய்ப்பு!! பைனான்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
Next articleஉயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் ஏற்படும் அறிகுறிகள்!! ஜாக்கிரதை!!