இனி லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டாம்..!! தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும்!!

Photo of author

By Priya

New Driving Licence rules in Tamil: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இதுவரை ஆர்டிஓ முன்னிலையில் டிரைவிங் டெஸ்ட் எடுத்து அதன் பிறகு தான் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இனி அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெறுவது தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி  ஜூன் 1 தேதி முதல் அமல்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இனி வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு ஆர்டிஓ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டிஓ முன்னிலையில் டிரைவிங் டெஸ்ட் எடுக்காமல் இனி தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

புதிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய விதியின்களின் படி இனி தனியார் நிறுவனங்களால் இந்த ஓட்டுனர் தேர்வு நடத்தப்படும் என்றும், அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களால் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நடைமுறையில் இருந்து வந்த,  பயிற்சி நிறுவனத்தில் கற்றுக்கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் அதிகாரிகளின் முன் வாகனம் ஓட்டி உரிமம் பெற்று வந்த நிலை மாறி, இனி பயிற்சி நிறுவனங்களினால் ஓட்டுநர் உரிமம் பெற முடியும். அதன்படி அந்நிறுவனங்களில் பயிற்சி ஊழியர்கள் அல்லது அதிகாரிகளின் முன் வாகனம் ஓட்டி உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

மேலும் போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதங்களில் மாற்றங்களை செய்து உள்ளது. அதன்படி இனி அதிவேகமாக வண்டி ஓட்டினால் ரூ.1000/- முதல் ரூ. 2000/-  வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது என்றும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அதாவது மைனர் வாகனம் ஓட்டினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 25 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கார் உரிமையாளரின் பதிவும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி நிறுவனங்கள்

அனைத்து தனியார் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற இயலாது. அரசு வெளியிட்ட விதிகளின்படி அந்நிறுவனங்கள் குறைந்த பட்சம் 1 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன பயிற்சிக்கு குறைந்தது 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

மேலும் பயிற்சியாளர்கள் உயர்நிலைப்பள்ளி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ஐந்து வருட ஓட்டுனர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஐடி மற்றும் பயோமெட்ரிக் அமைப்புகளை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN GOVT JOB: 10th படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!