போக்குவரத்து பணியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! இனி இதை செய்துவிட்டு வேலைக்கு வந்தால் அவ்வளவுதான்!

0
193

மது அருந்திவிட்டு பணிக்கு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.

பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பணிமனைக்கு உள்ளே வரும் பேருந்துகள் 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்குள் வெல்டிங் பணி செய்யும் போது நிச்சயமாக பேட்டரி ஒயர் துண்டிக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப பணிகளுக்காக பேருந்துகள் பணிமனைக்குள் இயக்கப்படும் போது, ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்து இயக்கக் கூடாது. இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பணி புரிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலை பார்க்கும்போது கைப்பேசிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பணியாளர்கள் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானால், உரிய மேற்பார்வையாளரிடம் அனுமதி வாங்கிய பிறகு செல்ல வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியில் இருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில், பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.

Previous articleஅரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!
Next articleஇரண்டு பெண்கள் படுகொலை: விசாரணையில் சிக்கிய வேட்டைக்காரன்! காளான் பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here