வெளிநாடுகளில் இருந்து சுங்கவரியின்றி தங்கத்தை கொண்டு வருவதன் வழி என்ன?

0
182

துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாக தெரிந்தாலும் கூட இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி எண்ணிக்கை, எடை என பல தடைகளை கடந்து தான் விமான பயணிகள் எடுத்து வர முடியும்.

வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகம் அக்கரிடம் இன்னமும் குறைந்த பாடில்லை சென்ட், டிரஸ், தலைவலின் தைலம் நகைகள் என்று எல்லாமும் இங்கே கிடைத்தாலும் நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒரு வித பெருமை தான் எல்லோருக்கும்.

அதிலும் முதலீடுகளை தங்கத்தில் ஓடுபவர்கள் துபாய் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தங்க நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

தூய்மை தரம் மலிவான விலை இன்று பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு மற்றும் தங்களுடைய உறவினர்களுக்கு இந்தியா வரும்போதெல்லாம் வாங்கி வருகிறார்கள்.

தற்சமயம் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் துபாயில் இருக்கின்ற நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது என சொல்கிறார்கள். இந்தியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. கடந்த செப்டம்பர் மாதத்தில் துபாய் சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,252 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே சமயத்தில் இந்திய சந்தையில் ஒரு கிராம் 4656க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையில் பெரியளவில் வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை. ஆனாலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஜூலை மாதத்தில் இந்திய அரசாங்கம் இறக்குமதி வரியை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது.

ஆனாலும் துபாய் தங்கம் தரமானதாக இருப்பதால், மக்கள் வாங்குவதை நிறுத்தவில்லை. ஆகவே நீங்கள் துபாயில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் இறக்குமதி வரியை தவிர்க்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இங்கே அறிந்து கொள்ளலாம்.

துபாயில் தங்கம் வாங்க செய்ய வேண்டியது என்ன?

துபாயில் நீங்கள் தங்கம் வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தது நீங்கள் ஒரு வருடமாவது துபாயில் தங்கியிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கிலோ வரையில் தங்கத்தை நீங்கள் எடுத்து வரலாம்.

ஆனால் முறையான ஆவணங்கள் ரசீதுகள் மற்றும் பில்களை எடுத்துச் செல்லவில்லையென்றால் சுங்கவரி துறையால் அபராதம் விதிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தங்க நகைகளுக்கான அளவு கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்திய சுங்க விதிமுறைகள் இந்திய பயணிகளுக்கு தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆண் பயணிகள் 20 கிராம் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கொண்டு வரலாம்.

அதே நேரம் பயணிகளாக இருந்தால் இதோடு இரு மடங்கு தொகையை எடுத்து வரலாம். அத்துடன் தம்பதிகளாக இருந்தால் 60 கிராம் நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் நீங்கள் எடுத்து வர முடியும்.

ஆகவே துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் தங்கத்திற்கு இறக்குமதி வரியை தவிர்க்க நீங்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Previous articleஎச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!
Next article65 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 21 வயது இளைஞர்!! காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்!!