chennai:”ஃபெஞ்சல்” புயல் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது உள்ளது.
வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து.
இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 கி மீ வேகத்தில் நகரத் தொடங்கியது. இந்த புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. காற்றின் வேகம் சுமார் 90 கி மீ இருக்கும் எனவும்,அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.
சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மலையானது இன்று காலை 10 மணி முதல் கனமழை பெய்யும் என அறிவித்து. இந்த நிலையில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. மேலும் பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மின் மோட்டார்கள் மூலம் இறைத்து வருகிறார்கள். மேலும் மேலும் பலத்த காற்றினால் அசோக் பில்லர் பிரதான சாலையில் மரம் ஒன்று விழுந்து உள்ளது அதை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.