ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! 

Photo of author

By Sakthi

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்!
தமிழகத்தில் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று(மே7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கோடை காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல மக்கள் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு குவிந்து வருகின்றனர்.
இதையடுத்து அதிகப்படியான மக்கள் வருவதால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மலைப்பாதைகளில் சாலைப் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாக இருக்கின்றது என்றும் இதனால் மலைப்பகுதிகளில் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகின்றது என்றும் புகார்கள் எழுந்து வந்தது. மேலும் இது குறித்து சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதையடுத்து சென்னை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உச்ச நீதிமன்றம் “கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நடைமுறையில் இருந்த இ-பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். மே 7ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா வரும் மக்களுக்கு இ-பாஸ் வழங்குவதற்கு முன்னர் வாகனங்களில் வருபவர்களிடம் சுற்றுலா பயணிகள் வரும் வாகனம் என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்பது குறித்த விவரங்களை கேட்க வேண்டும்” என்று சென்னை உச்சநீதி மன்றம் திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அது மட்டுமில்லாமல் “இ-பாஸ் வழங்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும் இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும் உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் இ-பாஸ் நடைமுறை பற்றி இந்திய அளவில் அதிக அளவு விளம்பரம் செய்ய வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு உடனே தீர்வு காணும் வகையில் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
இதையடுத்து சென்னை உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அடுத்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று(மே7) முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறியதை போலவே உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.