அதிகாலை முழிப்பு வருகிறதா? அப்போ இதான் அர்த்தம்..!

Photo of author

By Priya

Early Morning wake up: நம்மில் பலரும் எனக்கு தூக்கமே வரவில்லை, என்ன என்றே தெரியவில்லை என கூறி கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் இரவு 8 மணி முதல் இரவு 9 மணிக்குள் உறங்கினாலும், அதிகாலை அவர்களுக்கு சீக்கிரமாக முழிப்பு வந்துவிடுகிறது. இது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒரு சிலருக்கு இது நீண்ட நாட்களாகவே இருந்து வரும். இவ்வாறாக இவர்கள் அதிகாலை முழிப்பு (Athikalai vizhippu) வந்து விட்டால், மீண்டும் அவர்களுக்கு தூக்கம் வராது. அது ஏன் என்று இந்த பதிவில் காண்போம்.

பொதுவாக சிலருக்கு விழிப்பு வருவதற்கு காரணங்கள் இரண்டு விதமா கூறப்படுகிறது. இயற்கை உபாதைகள், நெஞ்சரிச்சல் அல்லது வேலை பளுவின் காரணமாக இரவில் விழித்துக்கொள்வார்கள். அப்படி விழிப்பு வந்தால் அது சாதாரண விஷயம் தான். அதுவே எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு அதிகாலை விழிப்பு வந்தால் அது உங்கள் ஆழ் மனது பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் நேரமாகும். அதாவது நீங்கள் தெளிவில்லாமல் இருக்கிறீர்கள் மற்றும் மன அழுத்தத்தில் உள்ளதற்கான அறிகுறி.

முதல் காரணம்

நீங்கள் ஒரு விஷயத்தில் நீண்ட நாட்களாக எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியாமல் மற்றும் அதனை குறித்து நீங்கள் எப்போதும் சிந்தனை செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதாவது நீங்கள் ஒரு நபரை பற்றிய சிந்தனையில் அல்லது பொருட்களை பற்றிய சிந்தனையில் அல்லது வேறு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் உங்களுக்கு தெளிவில்லாமல் அதனை பகல் வேளையில் சிந்திக்கொண்டு இருந்திருந்தால், இந்த அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மணி நேரத்தில் உங்களுக்கு விழிப்பு வந்துவிடும்.

அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை என்பது உங்கள் மனது மற்றும் உடல் ஓய்வு நிலையில் இருக்க கூடிய நேரமாகும். அப்போது உங்கள் ஆழ்மனது சிந்தனைகள் இந்த பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது.

இரண்டாவது காரணம் 

யாரேனும் ஒருவர் உங்களை பற்றி நினைத்துக்கொண்டிருந்தாலும் உங்களுக்கு அதிகாலை  விழிப்பு ஏற்படும். இங்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம், அவர்கள் நினைத்தால் நமக்கு ஏன் விழிப்பு வருகிறது என்று, அதற்கு காரணம் அவர்களின் எண்ணம் நமது ஆழ்மனதிற்குள் ஊடுறுவும் போது, ஏற்கனவே நம் ஆழ்மனதும் வேறு ஏதோ எண்ணத்தில் பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருக்கும் போது இரண்டும் மோதிக்கொள்வதால் இந்த விழிப்பு நிகழ்கிறது. அதனை நாம் ஆங்கிலத்தில் Thought Conflict என்று கூறுகிறோம். இதனை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றால், உங்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் அடிக்கடி ஏற்படும். அந்த கனவுகள் உங்களுக்கு நினைவில் இருக்கும்.

மேலும் படிக்க: Vavval facts: ஆமா..! வெளவால்கள் ஏன் தலைகீழாக தொங்குகிறது?