நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு! டெல்லியில் கடுமையான நில அதிர்வு!

Photo of author

By Sakthi

நேபாளத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு! டெல்லியில் கடுமையான நில அதிர்வு!

Sakthi

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1:57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உண்டானது இதன் ரிக்டர் அளவுகோல் 6.3 என்று பதிவானது.

அதோடு இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது இந்த சம்பவம் காரணமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி உண்டான நிலநடுக்கம் காரணமாக 8,964 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமே இதுவரையில் மறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு நிலநக்கம் ஏற்பட்டு உயிர் பலியை வாங்கியுள்ளது.