அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!!

0
139
Easy for government school students now !! Minister orders !! Need Exam Applications !!
Easy for government school students now !! Minister orders !! Need Exam Applications !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!!

இந்தியாவில் மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதேசமயம் மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பாதிப்பு குறித்து தனி குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என கல்வித்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் அவர்கள் பள்ளிகள் வழியாகவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் உதவியின்றி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலைமை இருப்பதாலும் மேலும் அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கல்வித்துறை இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஆகவே தேர்வு விண்ணப்பத்தில் எந்தவித தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்  வழங்கியுள்ளது. நீட் தேர்வுக்கு ஜூலை 16 முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Previous articleவிஷயம் தெரியுமா உங்களுக்கு?? விஜய் டிவில வெள்ளித்திரை நடிகை புது சீரியல்ல நடிக்க போறாங்களாம்!!
Next articleஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!