இந்த உணவை சாப்பிட்டால் புற்றுநோய் வராது!! ஆய்வில் தகவல்!!

Photo of author

By Jeevitha

ஜப்பானில் உள்ள மக்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று  உள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் உணவு முறை என்று கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவு பொருள்களில் புற்றுநோய் ஏற்படும் செல்களை குறைக்கிறது என ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவுகளில் நியூக்ளிக் அமிலங்கள் இருப்பதால் புற்றுநோய்களின் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒசாகா பெருநகரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அகிகோ கோஜிமா-யுசா தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோய் தடுப்புக்கு நியூக்ளிக் அமிலங்கள் எவ்வாறு பங்களிக்கும் என்பதை இந்த ஆய்வில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த ஆய்வு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தாலும் அன்றாட உணவுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாக்கும் என இந்த ஆய்வு விளக்குகிறது. மேலும் ஆராய்ச்சி குழு குவானோசின் என்ற புற்றுநோய் உயிரணுக்கள் வளர்ச்சியை தடுக்கும் ஒரு சிறப்பான திறனை கொண்டிருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

நியூக்ளிக் அமிலம் என்பது உணவு உட்பட அனைத்து உயிரினங்களில் காணப்படும் ஒன்றாகும். ஜப்பானிய உணவான சால்மன் உணவு வகைகளில் சில வகையான நியூக்ளிக் அமில மூலக்கூறுகளின் அதிக அளவில் உள்ளன. இந்த நியூக்ளிக் அமில மூலக்கூறுகள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை உடைக்கும் போது அதன் வளர்ச்சி நின்று விடும் என பேராசிரியர் கோஜிமா-யுசா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜப்பான் மக்களுக்கு அவர்கள் உணவு முறைகளே அவர்களுக்கு நீண்ட ஆயுளை தருகிறது.