நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த கட்சியின் எண்ணிக்கைகளை அவ்வளவு எளிதில் யாராலும் சொல்லிவிட முடியாது.
திரும்பிய பக்கமெல்லாம் கட்சியின் கொடிகள், கட்சி அலுவலகம், கட்சியின் நினைவு கொடிக்கம்பம் என்று பலரும் அதகளம் செய்து வருகிறார்கள்.
ஆனால் பொதுமக்களிடம் அறிமுகமே இல்லாத ஒரு சில கட்சிகள் செய்துகொள்ளும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுமக்களிடம் அறிமுகமாகி ஆட்சியைப் பிடித்து பல சட்டசபை உறுப்பினர்களை கையில் வைத்திருக்கும் கட்சிகளும் கூட இதை போன்று பெரிதாக பில்டப் செய்து கொள்வதில்லை.
இன்றைய நிலையில், நாட்டில் பல கட்சிகள் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள் முகவரி பொறுப்பாளர் விவரங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தவறியது போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆகவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது இந்த விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது இதனை தொடர்ந்து அந்த 87 கட்சிகளையும் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியிருக்கிறது.
விதிமீறல் போன்றவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த கட்சிகளுக்கு தேர்தலில் சின்னம் பெறுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் உண்டாகும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்தது.