விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

0
180
Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?
Echo of plane crash deaths! Full list of travelers released! What became of the Troops Commander?

விமான விபத்தின் பலி எதிரொலி! பயணம் செய்தவர்களின் முழு பட்டியல் வெளியீடு! முப்படை தளபதி என்ன ஆனார்?

நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளின் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராணுவ உயரதிகாரிகள் பலரும், இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட பதினான்கு பேர் கொண்ட குழு கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ விமானப்படை தளத்திலிருந்து 11:30 மணி அளவில் நோக்கிக் கிளம்பினார்கள்.

அப்போது மிகவும் மேகமூட்டமாக இருந்ததன் காரணமாக, குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பள்ளத்தாக்கிற்கு மேலே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகவும், காலநிலை சூழ்நிலைகள் குழப்பமாகவும், இருந்தது. அதன் காரணமாகவும் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட விசாரணைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இதுவரை ஹெலிகாப்டரில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்கு போராடிய நிலையில் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பயணம் செய்த முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் சொல்லியுள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்கள் பெயர் விபரங்கள்:
1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
3. பிரிகேடியர் லிடர்
4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
5. குர்சேவர் சிங்
6. ஜிஜேந்தர் குமார்
7. விவேக் குமார்
8. சார் தேஜா
9. கவில்தார் சத்பால்

அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த உயர் அதிகாரிகளின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அங்கே மீட்பு பணிகள் மிகவும் துரிதமாகவும், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், எஸ்.பி ஆஸிஸ் ராவத், மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணிகளை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு அந்த ஹெலிகாப்டர் இன்னமும் எரிந்து கொண்டிருப்பதன் காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது எனவும், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இது குறித்து அவசர ஆலோசனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை 04:30 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் செல்ல உள்ளதாகவும் தற்போது தகவல் வெளிவந்துள்ளன. இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக விஷயங்களை கேட்டறிந்து தெரிந்து கொண்டுள்ளார். மேலும் அவர் இந்த விபத்து நடந்த இடத்தில்  மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஇனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!
Next articleஇனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!