பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!

Photo of author

By Sakthi

பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!
நேற்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டதன் விளைவாக இன்று(ஜூலை24) இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
நேற்று(ஜூலை23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதாவது தங்கம் இறக்குமதி செய்யப்படும் பொழுது விதிக்கப்படும் வரி 15 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய(ஜூலை23) பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்கத்தின் விலை நேற்று(ஜூலை23) ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்தது. அதே போல கிராமுக்கு 260 ரூபாய் குறைந்தது. இதையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52400 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 6550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும்(ஜூலை24) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இன்று(ஜூலை24) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 51920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து 6490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் தங்கத்தை வாங்குபவர்கள் மத்தியில் இந்த விலை குறைவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதே போல வெள்ளி ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து வெள்ளி ஒரு கிலோ 87500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல வெள்ளி ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.