ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

Photo of author

By Pavithra

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி,அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பன்னீர்செல்வமும்,எடப்பாடியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை வர உத்தரவு என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று ஒரு தகவல் வெளியிடப்பட்டது.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிற்கு ஒருநாள் முன்னதாக எம்எல்ஏக்கள் கூட்டம் என்ற தகவலை கண்ட அதிமுக கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஏனெனில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் கையொப்பத்துடன்தான் தலைமை கழக வெளியீடாக தான் வெளிவரும்.

ஆனால் ஆறாம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் என்ற அறிவிப்பானது ட்விட்டர் பதிவின் மூலம் வந்தது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
நேற்று காலை காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ்,காமராஜர் நினைவிடத்தில் மரியாதை, தம்பிதுரையுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு பிறகு அவர் சொந்த மாவட்டமான தேனிக்கு புறப்பட்டார்.அவர் தேனிக்கு சென்ற பிறகுதான் இந்த தகவல் ஓபிஎஸின் கவனத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வருகின்ற அக்டோபர் 5-ஆம் தேதி ஓபிஎஸ்-க்கு தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் அவற்றை முடித்து விட்டு அன்று இரவு அல்லது ஆறாம் தேதி காலையில் தான் சென்னை திரும்புவதாக திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படிப்பட்ட ட்விட்டர் பதிவால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம்,
கே.பி.முனுசாமியிடம் தொலைபேசியின் மூலம் இந்த அறிவிப்பை பற்றி கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த பதிவை யார் வெளியிட்டது என்ற விசாரிப்புகள் நடந்த நிலையில் இந்த ட்விட்டர் பதிவானது சில மணிநேரத்தில் டெலிட் செய்யப்பட்டது.
இதுமட்டுமின்றி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸிற்கு தெரியாமலேயே எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப் படுவதாக அறிவிப்பு எவ்வாறு வெளியிடலாமென்று ஓபிஎஸின்
ஆதரவாளர்களிடையே
கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங் வட்டாரம் கூறியவாறு,பொதுவாக அதிமுகவின் ஐடி விங் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் சென்னை மண்டலத்தின் செயலாளராக ஆஸ்பயர் சுவாமிநாதனும்,மதுரை மண்டலத்தின் செயலாளராக ராஜ் சத்யனும் பொறுப்பு வகிக்கின்றனர்.இதில் மதுரை மண்டலத்தின் செயலாளரான ராஜ் சத்யன் எடப்பாடியின் ஆதரவாளராக திகழ்கிறார்.
இதுமட்டுமின்றி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இவரது கையில்தான் இருக்கின்றது.
எனவே எடப்பாடியின் கவனத்திற்கு வராமல் இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஐடி விங் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் எடப்பாடி ஆதரவாளர்களிடம் கேட்கும் பொழுது அந்த பதிவை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது என்று அவர்கள் மலுப்புகின்றனர்.
அதிமுகவில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் நேற்று வெளியான இந்த டுவிட்டர் பதிவானது மேலும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.