கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உயிரிழிப்புகளை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்வதாக மமக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் “தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்து மக்களை பாதுக்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலை விபத்து, தற்கொலை இதற்கெல்லாம் முதலமைச்சர் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பலமுறை இராஜினாமா செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.