
ADMK: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. குறிப்பாக இ.பி.ஸ் பதவி ஏற்ற பிறகு சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்ததாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனை ஒரு வாரத்திற்கு முன் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி மேலும் அதிர்ச்சியை கூட்டினார்.
ஆனால் பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தற்போது புதிய திருப்பமாக ஒ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ.பி.எஸ் தலைமையில் இணைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் , செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பிலிருந்தவரை தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
இதனால்தான் ஓ.பி.எஸ் தலைமைக்கு மாறினோம். தற்போது அதிமுக பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நீக்கப்பட்டபின் அதிமுக-வில் ஏற்பட்ட மாற்றம் ஓ.பி.எஸ் அணியினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது.
இது இ.பி.எஸ் தலைமையிலான வலிமையை மீண்டும் கூட்டியுள்ளதாக அதிமுக-வினர் கூறுகின்றனர். இந்த சேர்க்கை அதிமுக-வில் பல மாதங்களாக இருந்த வந்த உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.