
ADMK TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு விட முடியாமல் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர். சுமார் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கும் இது போன்று நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் சென்றார். அப்போது பேசிய அவர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்தார். அதிமுக பிரச்சாரத்தின் போதும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்ததை போல விஜய்யின் பரப்புரைக்கும் வந்தது என்று கூறினார்.
வேண்டுமென்றே பரப்புரை பகுதிகளில் ஆம்புலன்ஸ்யை அனுப்பி மக்கள் மத்தியில் மற்ற கட்சிகளின் தரத்தை குறைக்க பார்க்கிறது திமுக என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் எங்களுடைய பொது கூட்டத்திற்கும் குறுகிய இடத்தை தான் பரிசீலிப்பார்கள் என்றும் இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இவர்களின் இந்த கருத்துக்கு திமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது தவெக தொண்டர்கள் அதன் மீது தாக்குதல் நடத்தினர், இதனையே தான் அதிமுக தொண்டர்களும் செய்தனர். தவெக தொண்டர்களையும் இந்த மனநிலைக்கு மாற்றியது எடப்பாடி பழனிசாமி தான் என்று தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.