துரைமுருகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. கவனம் பெற்ற உரையாடல்!!

0
459
Edappadi Palaniswami met Duraimurugan.. Focused conversation!!
Edappadi Palaniswami met Duraimurugan.. Focused conversation!!

ADMK DMK: சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று சட்டசபை அலுவல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பொதுநல விவாதங்கள் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது என்றும் கூறினார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கும், அண்மையில் இறந்த முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை முடிவடைந்த நிலையில், ஆலோசனையில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி துரைமுருகனிடம், உடல் நலம் எப்படி இருக்கிறது. பரவயில்லையா? என்று கேட்டார். இவர்கள் அருகில் இருந்த அமைச்சர்கள் அதனை பார்த்த வண்ணம் நின்றனர். அதிமுக-திமுக இடையே எப்போதும் பனிப்போர் நிலவு வரும் வேளையில் இவர்கள் இருவரின் உரையாடல் அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.

Previous articleசிபிஐ என்ற ரிமோட் மூலம் விஜய்க்கு பாதகமான அறிக்கையை பெற முயற்சிக்கும் பாஜக.. சூழ்ச்சி வலையில் விஜய்!!
Next articleகூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வர போகிறார்கள்.. பொடி வைத்து பேசும் வானதி சீனிவாசன்!!