ADMK TVK: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கபட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், இந்த கட்சி 2026 யில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. விஜய்கான ஆதரவும், ஆரவாரமும் திராவிட கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால், அவர் திமுகவை எதிரி என்று கூறியதால் அக்கட்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு எழுந்தது. இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது.
கடந்த 9 வருடங்களாவே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்தலாம் என நினைத்தது. ஆனால் விஜய் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்று திடமாக கூறி வந்தார். இதனை உடைத்தெறியும் வகையில் கரூர் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜய் அதிமுக கூட்டணிக்கு தலையசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் அதிமுக விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தது. செங்கோட்டையனை தவெக பக்கம் இழுத்ததால் மேலும் கோபமடைந்தனர்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவையும், விஜய்யையும் கடுமையாக வசைப்பாடி வந்தனர். ஆனால் இபிஎஸ் விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்காமல் இருந்தார். இந்நிலையில் தவெகவின் இணை பொது செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மக்கள் விரும்பாத தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மக்களிடம் இருந்து விலகி வருகிறது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே தலைவர் விஜய் தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக- தவெக இடையே மேலும் சலசலப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

