ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு…! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு…!

Photo of author

By Sakthi

ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு…! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு…!

Sakthi

தமிழ்நாட்டில் பாதிப்பு அடுத்த கட்டத்தை நெருங்கி வருகிறது என்றும் அடுத்த சில மாதங்களில் இதன் வேகம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் முதல்கட்ட கொரோனா அலை தமிழக அரசின் கடுமையான நடவடிக்கையினால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது இந்த நிலைமையில் தான் மருத்துவர்கள் அடுத்தகட்ட எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அதில் ஒரு சில அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக மாவட்டம்தோறும் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார் அதோடு நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கிவைத்து வருகின்றார்.

தமிழக முதல்வரை போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொரோனா சமயத்தில் எந்த முதல்வரும் மக்களை நேரில் சென்று சந்தித்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பயம் காரணமாக காணொளி மூலமாக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசும் முதல் அமைச்சர்களுக்கு இடையில் அதிக கவனத்துடன் தமிழக மக்களை தானே நேரில் சென்று சந்தித்து பேசும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்றார். இதன் காரணமாகவே மக்களிடையே முதல்வருக்கு அதிக செல்வாக்கு பெருகி வருகிறது என்று சொல்கிறார்கள் அத்துடன் மக்களின் தேவைகள், மற்றும் பிரச்சனைகள், என்ன என்பதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் முதல்வர் செயல்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.