தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் வீட்டிலேயே மாணவர்கள் தொடங்கியிருப்பதால் மனதளவிலும், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை சமாளிக்க இயலாமல் பெற்றோர்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
நோய் தொற்று பரவல் காரணமாக, 2019 மற்றும் 20 ஆம் கல்வி ஆண்டில் இறுதியில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல 2020 மற்றும் 21 ஆம் ஆண்டு கல்வி வருடத்திலும் தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி எதிர்வரும் காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அலகு தேர்வை நடத்தி அதன்மூலம் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.
அந்தந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த அலகு தேர்வை நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையின் மூலமாக அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது.எதிர்வரும் காலங்களில் பொதுத் தேர்வு நடத்த இயலாத ஒரு சூழல் ஏற்பட்டால் அலகு தேர்வு நடத்துவதன் மூலமாக, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து கணக்கிட்டு தேர்வு முடிவை அறிவிக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு வருட காலமாக இந்த நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்மூலம் கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.அதேபோல பள்ளிகளிலும் முதலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த பள்ளிக்கல்வித்துறை பின்பு சில காலம் கழித்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மொத்தமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் பலமானவர்கள் குஷியில் துள்ளி குறித்தாலும் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது என்பது தொடர்பாக யோசித்தாள் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் பள்ளிக்கு சென்று படித்து அதன் மூலம் மதிப்பெண்களை பெறும் மாணவர்களாலேயே வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஆனால் பள்ளிக்கும் செல்லாமல் அனைத்து விதமான பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்து வேலை தேடும் போது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.