2022-2023ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்! பரபரப்பானது நாடாளுமன்றம்!

Photo of author

By Sakthi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது, முதல் நாள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் இந்த நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 2வது முறையாக காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கிறார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை பலப்படுத்தும் விதமாக அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், நாம் நோய்தொற்று காலகட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறோம். தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகின்றோம்.

5 வருடங்களில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு, மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது என்றும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.